கோவை :
காந்தி பூங்கா அருகே உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் உள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களும் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. பட்டாசு கிடங்கு அருகே தனியார் கல்வி மையமும் உள்ளது. எனவே தனியார் கல்வி மையத்தில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வரை இக்கல்வி மையத்தில் இருந்து 6 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவருமே சுயநினைவின்றி மயக்க நிலையிலே உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் கல்வி மையத்தின் ஒவ்வொரு அறையாக சென்று தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel