சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்,  கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20 காவல்நிலையங்களில்  முறையான சிசிடிவி காமிரா இல்லை என்பத  ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  2024 ஜுலை மாதம் தெரிவித்துள்ளது.  ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டுமே மொத்தமுள்ள 40 காவல் நிலையங்களில் 20 காவல் நிலையங்களில் முறையாக கண்காணிப்பு காமிராக்கள் இல்லை என்பது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாக உள்ளது.

பொதுமக்கள் மீதான போலீசாரின் வன்முறைகள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த அதிமுக ஆட்சியின்போது,  நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையித்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்த மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதுபோல, மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன் திடீரென உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், 25க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் நடந்த அஜித் மரணம், போலீசாரின் காட்டுமிராட்டித்தனமான தாக்குதல் தொடர்பான வீடியோ  நாடு முழுவதும்  வெளியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவல்துறையினரின் எல்லைமீறல், அதனால் விசாரணை கைதிகள் பாதிக்கப்படும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, காவல்துறையிரின் அடாவடி செயல்களை தடுக்கும் வகையிலும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக  நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 

 நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என்றும்,   அதன் பதிவுகள் ஒரு வருடம் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கடந்த அதிமுக அரசு முக்கிய காவல்நிலையங்களில் மட்டுமே காமிராக்களை பொருத்தியது. ஆனால், அடுத்த 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அனைத்து காவல்நிலையங்களிலும் காமிரா பொருத்த நடவடிக்கை எடுத்தது.  அதனப்டி,   மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு  2023ம் ஆண்டு மார்ச் 1ந்தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை  2ந்தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு,  தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,   கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

சிசிடிவி கேமிராக்கள் இல்லாததே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படும் நிலையில், அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காகக் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல்நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மொத்தமாக 25 காவல்நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் 20 காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த அசோக்ஸ்ரீநிதி மீது காவல்நிலையத்தில் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி அராஜகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தான் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள் எனக் கோரிய போது போலீசார் மறுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகக் காவல்நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் பெரும்பாலான காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோவை மாவட்ட காவல்நிலையங்கள் மீது புகார் எழுந்துள்ளன. காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததே காவலர்களின் அத்துமீறலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 99% போலீஸ் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமரா வசதி உள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…

காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி காமிரா உடனே பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம்