சென்னை: கோவை டிஐஜி விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது தற்கொலைக்கு அலுவல் பிரச்னை மற்றும் பணிச்சுமை காரணமில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2009 ல் ஐபிஎஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் இவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்பியாக பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம் கோவை டிஐஜியாக பொறுப்பேற்றார். கோவையை கட்டுக்குள் வைத்திருந்தார். கோவை சரகம் என்பது கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்டதாகும். நான்கு மாவட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஐபிஎஸ் அதிகாரி இன்று காலை வழக்கமான நடைபயிற்சி முடித்து விட்டு வந்த நிலையில், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விஜயகுமார் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது தற்கொலைக்கு பணி சுமை, மனஅழுத்தம் காரணமாக கூறப்படுகிறது. சிலர் அவரது குடும்ப சூழல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இவரது உயிரிழப்பு காவல்துறைக்கு பேரிழப்பாகும் என முதல்வர் ஸ்டாலின், டிஐஜி சங்கர்ஜிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருந்தத்தக்கது. அவரது மரணத்துக்கு பணிச்சுமை காரணம் இல்லை. கடந்த சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டு, ஐ.ஜி. சுதாகர் ஏற்கனவே கவுன்சிலிங் அளித்துள்ளார். விஜயகுமார் ஏற்கனவே ஃபெட் வங்கி கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் மிக துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தவர், மிகவும் நேர்தமையான மற்றும் துணிச்சல் மிகவும். ஒரு நேர்மையான அதிகாரியை காவல்துறை இழந்து விட்டது. அவரது மரணம் குறித்து ஐ.ஜி. சுதாகர் தலைமையில் காவல்அதிகாரிகள் விசாரஷை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கூறினார்.