திருவாரூர்: கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவாரூர் பகுதியில் சிலரது வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது அநத பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் என்ஐஏ கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியல் தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் என்பவருடன் தொடர்பில் உள்ள பலர் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நெல்லை மேலப்பாளையத்தில் முஸ்லிம் மதகுரு ஒருவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சிலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, அவர்களுக்கு கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா?, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டதுடன்,, ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சோதனை நடத்தப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தது சிலரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.