கோவை: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை – பிகாா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துஉள்ளது.
கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், கோவையில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவையில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் புறப்படும் கோவை -பரௌனி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, பரெளனியில் இருந்து ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 6 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் பரௌனி – கோவை சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06060) திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். Advertisement இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி, பகோரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவையை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், : கோவை – பரௌனி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும். Advertisement இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி – கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.