கோவை: கோயமுத்தூரில் நுண்கலை ஆர்வலர் ஒருவர் 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கலை கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந் நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அவரது பெயர் மாரியப்பன்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை ஒட்டி 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கியுள்ளார். இந்த சிறிய தங்க சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.