கோவை: கோவைஅருகே மசகாளிபாளையம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை  திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டம் மசகாளிபாளையம் அருகே  பிரசாத்- விஜயலட்சுமி என்ற தம்பதியின்   3 மாத ஆண் குழந்தைக்கு அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பென்டாவலன்று ( pentavalent) தடுப்பூசி போட்டுள்ளனர். சில குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வருவது வழக்கம். அதுபோல, குழந்தைக்கு காய்ச்சல் வந்தார், அதற்கான மருந்துகளும் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வீடு திரும்பியதும் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. தடுப்பூசி போட்டதால் குழந்தை அழுவதாக எண்ணிய குடும்பத்தினர், குழந்தைக்கு பாலூட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் பாலை குடிக்காமல் குழந்தை மயங்கி உள்ளது.இதைனால், அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், உடனே  அருகில் இருந்த  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சேர்தித்த மருத்துவர்,  குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால்,  குழந்தை இறப்புக்கு காரணம் தடுப்பூசி போடப்பட்தே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து   வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.