தமிழகத்தில் பொங்கல் போல ஆந்திர மக்கள் கொண்டாடும் இயற்கை த் திருவிழா, மகர சங்கராந்தியாகும். இந்த விழாவையொட்டி அங்கு சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.
இங்கே ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது போல, சேவல் சண்டையை எதிர்த்தும் அங்கே சில அமைப்புகள் வழக்கு தொடரந்தன. இந்த வழக்கு விசாரணையில் இடைக்கால தீர்ப்பாக சேவல் பந்தயத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
ஆனால் நீதின்ற தடை உத்தரவை மீறி ஆந்திராவில் சேவல் பந்தய்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன
நேற்று சேவல் சண்டையை துவக்கி வைத்தவர் ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மகந்தி பாபு.
காவல்துறையின் குறுக்கீடு எதுவும் இல்லை. அங்கே குழுமியிருந்தோர் அனைவரும் கை தட்டி சேவல் சண்டையை ரசித்தனர்.
சேவல் சண்டை ஜல்லிக்கட்டை போல அல்ல. மிக கொடுமையானது. சேவலின் காலில் கட்டப்பட்டிருக்கும் பிளேடு, எதிர் சேவலைக் குத்திக் கிழிக்கும். இறுதியில் ஒரு சேவல் இறந்துவிடும். இன்னொரு சேவல் . குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கும்.
ஆனாலும் அம் மாநில காவல்துறை, தடையைப் பற்றி கவலைப்படாமல் சேவல் சண்டைக்கு பாதுகாப்பு கொடுத்தது. அம்மாநில ஆளும் கட்சி பிரமுகர்களே சேவல் சண்டையை நடத்தினர்.