
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது.
கொரோனா காலகட்டம் என்பதால் தயாரிப்பாளர்கள் ஓடிடி, தொலைக்காட்சி என்று மாற்றுப் பாதையில் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு, அரசாணையை வெளியிட்ட நிலையில், நெட்பிளிக்ஸில் கோப்ரா என்ற வதந்தியை பலரும் உண்மை என்றே நம்பினர்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ஃபேக் நியூஸ் என்று மறுப்பு தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
[youtube-feed feed=1]