ஹூபே
நேற்று சீன நாட்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனா நாட்டின் ஹூபே மாகாணம் பஹன் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஊழியர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், 6 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தகவலறிந்து விரைந்து வந்து சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel