சென்னை: நங்கநல்லூர் கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு தொடர்பாக சங்க உறுப்பினர் பதவி யில் இருந்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதியை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதியும் உறுப்பினராக உள்ளார். சங்க கட்டிடம் தொடர்பான நடைபெற்ற டெண்டரில் ஊழல் நடைபெற்ற தாகவும், இதில் ஆர்.எஸ்.பாரதி பலன் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக நங்கநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் ஆலந்தூர் வெ.பரணி பிரசாத் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக, டெண்டர் முறைகேடு தொபடர்பாக நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்க உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்பட 10 நபர்கள் மீது சட்டப்பிரிவு 37-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், சட்டப்பிரிவு 37ன் கீழ் அவரை உறுப்பினர் பதவியில்ருந்து தகுதி நீக்கம் செய்யவும், செங்கல்ப்பட்டு மண்டல துணைப்பதிவாளர், தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.
இந்தநிலையில், பரணி பிரசாத் சார்பில் தாக்கல் செய்த மனுவில், டெண்டர் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை தகுத நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுமீது விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், செங்கல்பட்டு மண்டல துணைப்பதிவாளர் பரிந்துரையின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது 8 வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து இழப்பீட்டு தொகையை வசூல் செய்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இதன்மூலம் ஆர்.எஸ்.பாரதி இனி எந்த ஒரு கூட்டுறவு சங்கங்களிலும் அடிப்படை உறுப்பினர் பதவி கூட வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.