சென்னை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் மே மாதம் 12ந்தேதி தேர்தல் தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு அனுமதிப்பெற்ற 18775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2013-ம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 18,775 இடங்கள் நிரப்பப்படும் என்றும் , 5 தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முதல் கட்டமாக மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.