சென்னை

னவரி 6 அன்று சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கமாகும்.   வரும் ஜனவரி 6 முதல் 23 ஆம் தேதி வரை தென் இந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) நடத்தும் 45 ஆம் புத்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்த கண்காட்சி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜனவரி 6 அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று தலைமைச் செயலகத்தில் இதற்கான அழைப்பிதழை பபாசி தலைவர் எஸ்.வயிரவன், செயலர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத் தலைவர் மயில்வேலன், இணைச் செயலர் எஸ்.பழனி, துணை இணைச் செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் 2022-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.  இந்த தொடக்க விழா பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்கிறார். செயலர் எஸ்.கே.முருகன் நன்றி கூறுகிறார்.