ஞ்சை

நேற்று தஞ்சையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மு கருணாநிதியின் முழ் உருவச் சிலையை திறந்து வைட்த்துள்ளார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு சென்றுள்ளார் அவர் முதலில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அவர் தண்ணீர் திறந்து விட்டார். அதன்படி காவிரியில் 40 ஷட்டர்கள், வெண்ணாற்றில் 33, கொள்ளிடத்தில் 30, கல்லணைக்கால்வாயில் 6, மணற்போக்கியில் 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.

இதன் பிறகு முதல்வர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்  இந்நிகழ்வ்வுகளில் ஒன்றாக  தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் முதல்ச்ற்ர் மு.க.ஸ்டாலின், சிலைக்கு முன்பு நின்று கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஈஆ விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.