சென்னை:  தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் வெளிநாடு பயணமாகிறார்  என தகவல்கள் வெளியாகி உள்ளது. யுகே, ஜெர்மனி உள்பட சிலநாடுகளுக்கு அவரது பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் தமிழ்நாட்டு தொழிற்நிறுவனங்களை கொண்டுவந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். கடந்த 2021ம்  ஆண்டு முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், தொழில்துறை சார்பில், வெளிநாடு மற்றும் வெளிமாநில முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி அனறு  தமிழ்நாட்டில், மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு நடைப்பெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேட்டையும் வெளியிட்டார். இப்படி பல்வேறு வழிகளில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து,  கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 நாள் பயணமாக வெளிநாடு சென்றார்.  17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என முதல்வர் சென்னை திரும்பியதும் அறிவித்தார். அவரது வெளிநாடு பயணம் குறித்து மேலம் பல தகவல்கள் உலா வந்தன. அவர் மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மேலும் முதலீடூகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,   இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் பயணம் செல்கிறார் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் இதுவே அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இருக்கலாம்.

சமீபத்தில் உடல்நலம் பாதிப்பு காரணமாக, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற முதல்வர் ஸ்டாலின் 10 ஓய்வுக்கு பிறகு மீண்டும் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், அவரது திடீர் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.