சென்னை: கவர்னர் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் உள அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
கவர்னர் அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தில் திமுக தலைவரான முதலமைச்சர் பங்கேற்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். ஆனால் தமுக பங்கேற்காது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இந்த தேநீர் விருந்தில், திமுக உள்பட அதன் கூட்டணி கட்சகிள் பங்கேற்கமாட்டோம் என புறக்கணித்துள்ள நிலையில், திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , ஆளுநர் அளிக்கும் விருந்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்போம் என்று கூறினார்.
மருந்தாளுநர்கள் பயன்படும் வகையில் தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என்றதுடன், Genric Medicine என்ற வகையில் குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.
ஏழை, நடுத்தர மக்களுக்காக முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றவர், நாட்டுக்காக உழைத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.
இந்த புதிய திட்டங்கள் வரும் பொங்கல் முதல் செய்லபாட்டுக்கு வரும் என்றவர், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்றார்.
தமிழக மலை பிரதேசங்களில் வல்லுநர் குழுவை கொண்டு அறிவியல் ஆய்வு நடத்தப்படும். *வல்லுநர் குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக , விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்பட் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார். மேலும் அரசு சார்பில் கலந்துகொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் அவரது பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு எனவும், ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது எனவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.