சென்னை: 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால், பல கோவில்கள் வருமானமின்றி, விளக்குகள் ஏற்றக்கூட வழியில்லாமல் திண்டாடி வருகிறது. அதுபோன்ற சுமார் 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு தேவையான பொருட்கள் வாங்க ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார்.