சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல முதலமைச்சர்  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதுபோல, , “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டமும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது.