சான்பிராஸ்சிஸ்கா: தொழில் முதலீடுகளை பெற அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கு சென்ற முதல்வரை வரவேற்க ஏற்பாடுகள் செய்திருந்தார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்  அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளனார். அவர்  நேற்று இரவு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார். அவருக்கு  விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். . நடிகர் நெப்போலியன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மேலும் அமெரிக்க வாழ் இளைஞர்கள் நடனமாடி முதலமைச்சரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதையடுத்து சிகாகோவில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட முக்கிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். மேலும் அயலக தமிழர்களையும், முக்கிய முதலீட்டாளட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.