சென்னை; நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் 1ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, இந்த திட்டம் அது தனது கனவு திட்டம் என்று தெவித்தார். இந்த திட்டத்தின் நோக்கமானது, ஆண்டுக்கு, 10 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில்,சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது. மேலும், இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை திட்டத்தினை ஒருங்கிணைக்கும் , மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தினை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது, திறன் மேம்பாட்டு, வழிகாட்டி ஆகிய இரண்டு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது.
12ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டும் naanmudhalvan.tnschools.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டது. மேலும், துறைசார் நிபுணர்கள், வழிகாட்டிகள் மூலம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென இணைய வழி அமர்வுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இணையதளத்தை துவக்கி வைத்துள்ளார். நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சியை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.