சான்ஃப்ரான்சிஸ்கோ

விரைவில் சென்னையில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அவற்றில் ஒன்றாக செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அமெரிக்காவை சேர்ந்த அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனம் செமி கண்டக்டர் ஆலையை சென்னையில் அமைக்க உள்ளது.

இந்த ஆலை ரூ.250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைய உள்ளது.  இந்த ஆலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன வளர்ச்சி மையமாக இருக்கும் என கூறப்படுகிறது.