சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. கடந்த 34 வருடங்களில் இல்லாத அளவுக்கு கண்ணியத்தோடும், ஆக்கப்பூர்வமான முறையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது.

இப்படியொரு அரசியலை இதுவரை நான் பார்த்ததில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்த நிலையில், நடிகர் பொன்வண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வரைந்து, “ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பு… விவாதங்கள்… மக்கள் நல அறிவிப்புகள்… என நம்பிக்கையுடன் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வாழ்த்துகள்…” என தெரிவித்திருந்தார்.

இதற்கு முதல்வர் தொலைபேசியில் நடிகர் பொன்வண்ணனை அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.