ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆழியாளு படுகை புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக 70 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். வரும் நவம்பர் 4ம் தேதி முதல் உரிய இடைவேளி விட்டு, 70 நாட்களுக்கு 2,250 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம், பொள்ளாச்சி, ஆனைமலையில் உள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.