சென்னை

புத்தாண்டை முன்னிட்டு நேற்று கருணாநிதி  நினைவிடத்தில் தமிழகப்முதல்வர்  மு க ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

நேற்று உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நேற்றைய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்வர்ர் மு.க. ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்திய்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.