துரை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கூட்டாட்சி என்ற சொல்லே அலர்ஜி  எனக் கூறியுள்ளார்.

நேற்று முன்  தினம் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் தொடங்கியது.  இந்த மாநாட்டில்  சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.   விழாவில் அவருக்கு நினைவு பரிசு வ்ழங்கப்பட்டது.

தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,

”கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்-மந்திரியும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். மாநிலங்களை அழிக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்ற சிலரின் நப்பாசை நிறைவேறாது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள்.

வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். சமத்துவ சமுதாயத்தை அமைக்கவே தேர்தல் கூட்டணியை அமைக்கிறோம்”

என்று கூறியுள்ளார்.