சென்னை
தமிழக அறநிலையத்துறை சார்பில் ரூ. 190.40 கோடி திட்டபணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 42 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 15 திருக்கோவில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 18 திருக்கோவில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 49.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிகள்; திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் 44.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள், குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மற்றும் ஏழு தீர்த்த குளங்களை சீரமைக்கும் பணிகள்; தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம், அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் திருக்கோவிலில் 5.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி: திருவண்ணாமலை, அருள்மிகு நந்தவக் கட்டளையில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 25.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருவள வாய்க்கால் இருபுற கரைகளிலும் திருக்கோவில் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல சாலைகள் அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், புதிதாக திருக்கோவில் நுழைவுவாயில் அமைக்கும் பணி, கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் அங்கரிக்கும் பணிகள்; நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாபட்டினம், அருள்மிகு ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் 18.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஔவையார் மணி மண்டபம் கட்டும் பணி;
கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி; கருமத்தம்பட்டி, அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவிலில் 2.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி; திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் 5.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு சடையப்பசுவாமி திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கருங்கல் முன் மண்டபம் கட்டும் பணி; பெருந்துறை வட்டம், தங்கமேடு, அருள்மிகு தம்பிகலை ஜயன் சுவாமி திருக்கோவிலில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி;
திண்டுக்கல் மாவட்டம், கீரனூர், அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோவிலில் 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; செங்கல்பட்டு மாவட்டம், அரசர்கோவில், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், வளப்பூர் நாடு, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி; கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவிலில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுபிரகார கல் மண்டபம் கட்டும் பணி;
தூத்துக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; திருநெல்வேலியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கிருஷ்ணகிரியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி என மொத்தம் 190.40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல-மைச்சர் அடிக்கல் நாட்டினார்.”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.