சென்னை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்த்றையினருக்கான அதி நவீன வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 1 மாதத்திற்க்கு முன்பாக காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை வழங்கியிருந்தார்.

இன்று காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருசக்கர வாகன சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை சென்னை தலைமைச்செயலகத்தில் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]