ஊட்டி
தாம் ஏன் பாம்பன் பால திறப்பு விழவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-வர் மு.க. ஸ்டாலின்,
”உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் வரவில்லை. அம்மையார் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தனர். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது நீட் எதிர்ப்புக்காக இபிஎஸ் குரல் கொடுத்துள்ளாரா?
வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசாவும், திருச்சி சிவாவும் நாடாளுமன்றத்தில் முழங்கினர். வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்த்டில் வழக்கு தொடரப்படும் .தமிழகத்துக்கு வலிமையை குறைக்க பாஜக துடியாய் துடிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.”
என்று தெரிவித்துள்ளார்.