சென்னை,

ட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்துள்ளார்.

இதன் காரணமாக எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக தற்போது 3 அணியாக பிளவுபட்டு உள்ளது. ஏற்கனவே 2 அணியாக இருந்த உடைந்த அதிமுக, டிடிவி தினகரன் டில்லி ஜெயிலில் இருந்து ஜாமினில் வந்ததும், மீண்டும் கட்சி பணி ஆற்றப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து எடப்பாடி அணியும் இரண்டாக பிளவு பட்டது.

எடப்பாடி அணியில் உள்ள 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தனி அணியாகவும் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பு, முதல்வரை சந்தித்து, டிடிவி அணியை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கேட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பெருந்துரை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், இன்று திடீரென தனது  சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

இது கோட்டை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் எடப்பாடியும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறப்படுகிறது.

எடப்பாடி தலைமையிலான அரசுக்கு, மதில்மேல் பூனையாக உள்ள  டிடிவி தினகரனின் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், தங்களது  ஆதரவை விலக்கி கொண்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குடியரசு தலைவர் தேர்தலுக்கு பிறகு எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்…. தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏ ஒருவர் தனது, சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.