சென்னை:

காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பின்படி, காவிரி  மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க வரும் 9ந்தேதி டில்லியில் கூட்டம் நடைபெறும் என தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவருடன் முதல்வர் எடப்படி நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, தமிழக தலைமை செயலாளரும்,  பொதுப் பணித்துறை செயலாளரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டில்லியில் வரும் 9 ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்வது? கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்தும், அதில் தமிழக கருத்தை வலியுறுத்துவது குறித்தும், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று  மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய நிலையிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து வரும் 9ந்தேதி டில்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில், தமிழகம் சார்பாக, தமிழக தலைமைச் செயலாளரும், பொதுப் பணித்துறை செயலாளரும்  பங்கேற்பார்கள் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.