சென்னை
மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி உள்ளார்.
செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று மறைந்த குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தன்று மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகின்றன.
அவ்வகையில் நேற்று குடியரசுத் தலைவர் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டா ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களில் 389 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்..
நேற்று தலைமை செயலகத்தில் இந்த 15 பேருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் பள்ளிக்கலவி தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மைச் செயலர் காகர்லா ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விருது சான்றிதழில் எப்போதும் முதல்வர் படம் இடம் பெறும். இந்த ஆண்டு முதல்வர் படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.