கொஹிமா:

நாகலாந்து முதல்வர் ஷெலியாங் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

நாகாலாந்தில் தற்போது நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக ஷெலியாங் பொறுப்பு வகித்து வருகிறார். இதுவரை இவரை ஆதரித்து வந்த எம்.எல்.ஏக்களில் கணிசமானோர் தற்போது எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இதையடுத்து கட்சியின் அவசர கூட்டம் நாளை(20-02-17) நடக்கிறது. அதில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், தற்போதைய முதல்வர் ஷெலியாங் ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

.