“எச்.ராஜாவின் அனுமதி இன்றி அவரது முகநூல் பக்க அட்மின் பதிவிட்டது கண்டனத்துக்குரியது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எச்.ராஜாவின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது.
இதற்கிடையே திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுது. இன்னொரு புறம் சென்னை மயிலாப்பூரில் இருவரது பூணூல் அறுக்கப்பட்டது.
இந்த நிலையில் எச்.ராஜா, “எனது அனுமதி இன்றி என் அட்மின் அந்தக் கருத்தை பதிவிட்டுவிட்டார். அதை நான் நீக்கிவிட்டேன். யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று தெரிவித்தார்.
ஆனாலும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் எச்.ராஜாவின் அட்மினுக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், “எச்.ராஜாவின் அனுமதி இன்றி அவரது முகநூல் பக்க அட்மின் பதிவிட்டது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.