சென்னை
பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க மட்டுமே தமிழகம் வரலாமா என முதல்வர் மு க ஸ்டாலின் வினா எழுப்பி உள்ளார்
இன்று பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4.181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்,-
”சென்னை மாநகரை இந்தியாவின் தலைசிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். என்னை சட்டமன்ற உறுப்பினராகவும்.வும், மேயராகவும், துணை முதல்vaராகவும், இப்போது முதல்vaராகவும் ஆக்கியது வட சென்னைதான்.
சென்னைக்கு நாள் தோறும் புதிய புதிய திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி படக்கருவிகள் பொருத்தப்பட உள்ளன. கழிவுநீர், திடக் கழிவு கட்டமைப்புகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
சென்னையின் வளர்ச்சித் திட்டங்களை நானே தொடர்ந்து கண்காணிப்பேன். 500 ஆண்டுகள் பழமையான சென்னையை நவீனமயமாக்குவதில் தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உள்ளது. சென்னையின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தி.மு.க. உருவாக்கியவைதான். தி.மு.க.வை உருவாக்கிய வடசென்னை பகுதியை முக்கியமாக நினைக்கிறது தி.மு.க. அரசு. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமாக்கப்படும்.
தமிழ்நாட்டுக்கு நிதியைக் கேட்டால் பிரிவினைவாதி என்பதா? நாங்கள் பிரிவினை பேசவில்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் கேட்கிறேன். தேசபக்தி பற்றி தி.மு.க.வுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. தமழதுக்குப் பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை. சென்னை வெள்ள பாதிப்புகளைப் பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. வெள்ளத்தின்போது மக்களைப் பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா?. சென்னைக்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. ”
என்று உரையாற்றி உள்ளார்.