சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேருந்துகளைக் கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநர்களை அறிவுறுத்தி உள்ளார்.
இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்து 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது ஓட்டுநர்கள் பேருந்துகளை மிகுந்த கவனத்துடன், வேக வரம்புக்குக் கட்டுப்பட்டு, கவன சிதறல்கள் இல்லாமல் இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.