சென்னை:
முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் தற்போது இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை பணிகள் முடிவுக்கு வரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, முதுகலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார். மேலும் சென்னை பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.