சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா 2ம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில் தற்போது அனைத்து வகையான கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

வாரத்தில் 6 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.