சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுமக்களின் வசதி மற்றும் அவர்களின் தேவைகாக உருவாக்கப்பட்ட தே தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். இந்த சட்டத்தின்மூலம், அரசின் அனைத்து துறையின் நடவடிக்கைகள் குறித்து சாமானிய மக்கள் அறிந்துகொள்ள முடியும். மாநிலத்தின் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை வெகுசிலரே முறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தில், சில முக்கிய குறிப்பிட்ட துறைகள் தவிர மற்ற அனைத்துச் செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு தகவல் ஆணையம், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 2023ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் எழுதிய விடைத்தாள்களை கேட்டு மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்காத நிலையில், அந்த மாணவி மாநில தகவல் ஆணையரிடம் மாணவி மேல்முறையீடு செய்திருந்தார். இதன்மீதான விசாரணையைத் தொடர்ந்து, அந்த மாணவி, உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதாவது ஒரு பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தி நகல்களைப் பெறலாம் என கூறி உள்ளது.
இதன்மூலம் இனிமேல் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ மாணவிகள் தங்களது விடைத்தாள்களின் நகல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறும் நிலை உருவாக்கி உள்ளது.
[youtube-feed feed=1]