சென்னை: முன்னாள் மனைவி பீலா ராஜேஷ் உடனான மோதலைத் தொடர்ந்து, வீட்டின் வாட்ச்மேனை தாக்கிய குற்றச்சாட்டில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாசை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் ராஜேஸ்தாஸ் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரணடையவும் தடை போட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது பண்ணை வீடு தொடர்பாக, அவருக்கும் அவரது முன்னாள் மனைவி பீலா ராஜேஸ் ஐஏஎஸ்-க்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில்,. ராஜேஸ்தான் அந்த பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பீலா ராஜேஷ் புகாரின்பேரில் அந்த பண்ணை வீட்டுக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விவகாரம் பேசும்பொருளானது.
இநத் நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று காலை கேளம்பாக்கம் போலீசார் திடீரென கைது செய்தனர். தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்பேரில், ராஜேஸ்தாசை கைது செய்து கேளம்பாக்கம் போலீசார், புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.