திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆரணி பகுதியில், அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பேருந்தில் இறங்கிய நிலையிலும் தொடர்த்து. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட ஒரு மாணவன் சக மாணவன் கழுத்தில் கத்தியால் குத்தினார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இந்த சுப்பிரமணிய சாஸ்திரியார் என்ற பெயரிலான பள்ளியில், சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான மாணவிகள் அரசு பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அதன்படி இன்று காலை ஆரணி அருகே உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் சதீஷ்குமார் என்ற மாணவனக்கும் அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இந்த பேருந்தில் இருந்து பள்ளிக்கு இறங்கிய பிறகும் நீடித்துள்ளது.
அப்போது திடீரென வசீகரன் என்ற மாணவன் சதீஷ்குமார் என்ற மாணவனை கழுத்தின் பின்பக்கம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சக மாணவ மாணவிகள் அலறினர். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மோதலில் வசீகரன் என்ற மாணவருக்கம் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேனா, பெண்சில் பிடிக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் கத்திகளையும், போதை பொருட்களையும், டாஸ்மாக் சரக்குகளையும் பிடிப்பது அதிகரித்து வருவது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.