கொல்கத்தா:

நாடு முழுவதும் இன்று 9 மாநிலங்களில் 72 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.  மேற்கு வங்க  மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பல வாக்குச் சாவடியில் பாஜக- திரிணாமூல் காங். மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் காவல்துறையினர் இடையேயும் மோதல் ஏற்பட்டது.

இன்றைய வாக்குப்பதிவின்போது,  வாக்குச் சாவடியில் பாஜக- திரிணாமூல் காங்., கட்சியினர் மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து,   திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

அன்சோல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி 125 முதல் 129 வரை இருந்த பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு படையினர், போலீசார் இருந்தும், அவர்கள் முன்னிலையிலே மோதல் நடைபெற்றது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் பல முறை எச்சரித்தும் அவர்கள் செல்லவில்லை. மாறாக பெண்கள் உட்பட பலரும், நீளமான உருட்டுக் கடைகளுடன் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசாரும், தேர்தல் சிறப்பு பாதுகாப்புப் படையினரும், தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழல் உருவானது.

வாக்காளர்களை,  திரிணாமுல் தொண்டர்கள் வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் குறைகூறினார். இதன் காரணமாக பல இடங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.