நாமக்கல்:  அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பைஏ ற்படுத்தி உள்ளது.

நாமக்கல்எ மாவட்டம்   எருமப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் கடுமையாக தாக்கப்பட்ட  ஆகாஷ் என்ற மாணவர் ஒருவர்  அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (வெள்ளிக்கிழமை)  இரவு உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியைச் சேர்ந்த மாணவன்  ஆகாஷ்(16),  இவர் நாமக்கல் அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். அதே வகுப்பில், செல்லிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரது மகனும் படித்து வருகிறார். இவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்  போது, வகுப்பறை வாசலில் விட்டிருந்த ஆகாஷ் காலணியை காணவில்லை என்று கூறப்படுகிறது.   இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், தனது செருப்பை யார்? மறைத்து வைத்தது என அங்கிருந்த மாணவர்கள் சிலரை திட்டியதாக தெரிகிறது. அதற்கு தொழிலாளியின் மகனான மாணவர் காலணியை நான் தான் ஒளித்து  வைத்துள்ளேன். எதற்காக திட்டுகிறாய் என கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர்.  அவர்களை சக மாணவர்கள் விடுவித்த நிலையில், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆகாஜ் கீழே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.  . இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அவரை எழுப்பியபோது, சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார்.

இதுகுறித்து மாணவர்கள் உடனடியாக தலைமை ஆசிரியர் புஷ்பராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஆகாஷ்  எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி  நேற்று  இரவு ஆகாஷ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸார், மாணவர் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். மேலும், மேலும்,  வழக்குப்பதிவு செய்து, ஆகாஷை தாக்கி கீழே தள்ளிய மாணவர், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய ஆகாஷின் பெற்றோர் , தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் எனது மகன் ஆகாஷ் வலிப்பு வந்து  மயங்கி விழுந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து எரும்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்தது. அங்கு இரவில் சென்று பார்த்தபோது கண்கள் மேலே சொருகிய நிலையில் உயிரிழந்த நிலையில் மகன் கிடந்தான்.  எங்களுடைய மகன் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்டம் உள்பட பல பள்ளிகளில் மாணவர்களிடையே  ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.