கிளாப் என்னும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஆதி.
இதில் நடிகை ஆகாங்க்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிளாப் திரைப்படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் & சர்வானந்த் ராம் சினிமாஸ் தயாரிப்பாளர்கள் P.பிரபா, பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் கிளாப் திரைப்படத்தை இயக்குனர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கிளப் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.