டில்லி

யோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பை வாசிக்க தொடங்கி உள்ளது.

அயோத்தியில் ராம்ர் கோவில் இருந்ததாக கூறப்படும் இடத்தில் பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்தது.   அதை இந்து அமைப்பை சேர்ந்த கர சேவகர்கள் 1992 ஆம் வருடம் இடித்து நொறுக்கினர்.  சர்ச்சைக்குரிய அந்த நிலம் உரிமை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் படிக்க தொடங்கி உள்ளார்.   இந்த வழக்கை  ரஞ்சன் கோகாய் தலைமையில் நிதிபதி போப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த தீர்ப்பு ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் அமைக்கப்பட்ட தீர்ப்பு என ரஞ்சன் கோகாய் கூறி உள்ளார்.  ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்ற மதம் தடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   சன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வக்ப் போர்ட் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை எனவும் மேலும் மசூதியின் அடித்தளம் இஸ்லாமிய முறைப்படி இல்லை. எனவும் தற்போது தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.