டில்லி:

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  மீது முன்னாள் உச்சநீதி மன்ற பெண் ஊழியர் ஒருவர் கொடுத்துள்ள புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதியிடம் நீதிபதிகள் குழுவினர் விசாரணை நடத்தினர்.

உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து நீதிபதிகள் ப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட பெண் விசரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி யது. அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான அந்த பெண், தனக்கு சரியாக காது கேட்காது என்று கூறிய நிலையில், தன்னுடன் வழக்கறிஞரும் ஆஜராக வேண்டும் என வற்புறுத்தினார். இதற்கு நீதிபதிகள் குழு அனுமதி மறுக்கவே,  பாதிக்கப்பட்ட பெண் தமக்கு இக்குழுவால் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை என்று கூறி விசாரணையில் இருந்து நழுவினார்.

இந்த நிலையில், பாப்டே தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது. அதையடுத்து, ரஞ்சன் கோகாய் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது,   தம் மீதான பாலியல் புகார்கள் போலியானவை என்று விளக்கம் அளித்தார். நீதித்துறையை மிரட்ட சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் ரஞ்சன் கோகய் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன் மூடப்பட்ட அறையில் விசாரணையில் நடத்தி வருகிறது.  அங்குதான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.