டெல்லி: மாசுபாட்டை சரிசெய்ய அனைத்து அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கூறி இருக்கிறார்.
உத்தரகாண்டில் இதுபோன்ற பல வழக்குகளை அவர் மற்ற நீதிபதிகளான பிஆர் கவாய், சூர்யா கண்ட் ஆகியோர் இணைந்து விசாரித்திருக்கிறார். இந் நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து வெப்ப ஆலைகளையும் மூடப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: நீங்கள் சுற்றுச்சூழலை அழிக்க முடியாது. சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான பகுதிகளுக்கு வெளியே வைத்திருப்பதை நீங்கள் பரிசீலிக்க முடியும் என்றார்.
மேலும், இதுபோன்ற பகுதிகளில் அமைந்துள்ள நாட்டில் உள்ள அனைத்து மின் திட்டங்களையும் மறுஆய்வு செய்ய பரிந்துரைத்தார். கேரளாவில் சட்டவிரோத மணல் சுரங்கத் தொழில் நதிகளை எவ்வாறு அழித்தது என்பது குறித்தும் அவர் பேசினார்.
கேரளாவில் மணல் திருட்டின் காரணமாக, பல ஆறுகள் அழிந்துவிட்டன. ஏன் என்றால் நீங்கள் சுற்றுச்சூழலை பற்றி கவலைப்படுவதில்லை. லாபத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்று அவர் கூறினார்.