புதுடெல்லி:

விமான போக்குவரத்து தலைமை பாதுகாப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு அதிகபட்ச சம்பளமாக மாதம் ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது.


சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இருந்தபோது, அவருக்கும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே காடும் மோதல் போக்கு இருந்தது.

அலோக் வர்மா மீது ராகேஸ் அஸ்தானா ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, ராகேஷ் அஸ்தானா விமானப் போக்குவரத்து தலைமை பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதேபோல், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தலைவர் ஒய்.சி.மோடிக்கும் மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதேபோல், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் டைரக்டர் ஜெனரல் எஸ்.எஸ்.தேஸ்வாலுக்கும் இவர்களைப் போலவே அதிகபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்கள் மூன்றுபோரும் குஜராத்தைச் சேர்ந்த 1984-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.