டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் கடந்த 2020ம்ஆண்டு பட்ஜெட்டின்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என உதான் திட்டத்தை கூறி அதற்கான நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். இந்த  உதான் திட்டம் பிரதமர் விருதுக்கு தேர்வாகி உள்ளது. அதற்கான விருது வரும் 21ந்தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாமானிய மக்களும் விமான சேவையைப் பெற 2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக உதான் திட்டம் கொண்டுவரப்பட்டு சிறு விமானங்கள் மூலம் பெரும்பாலான நகரங்களை இணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.  அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 415 வழித்தடங்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இநத நிலையில்,2020ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாக பிரிவில் சிறந்த திட்டமாக உதான் திட்டம்  பிரதமரின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும் என அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதான் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்களை அமைக்கவும், 2026ஆம் ஆண்டுக்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]