மணிப்பால்: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: குடியுரிமை சட்டம் குறித்து மாநிலத்தில் உள்ள சிலர் மக்களை குழப்பி வருகிறார்கள். இந்த சட்டம் சிக்கிம் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்.

எங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டார். குடியுரிமை சட்டம் உங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அவர் உறுதி அளித்து இருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ்,ஹம்ரோ சிக்கிம் கட்சி,சிக்கிம் குடியரசு கட்சி ஆகியவை சிக்கிம் மாநிலத்தில் குடியுரிமை சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று சொல்கின்றனர்.

அதிலும் ஹம்ரோ சிக்கிம் கட்சியின் தலைவர்  பாய்சங் பூட்டியா, இந்த சட்டம் மாநிலத்தின்  புவியியல் அமைப்பை மாற்றவிடும் என்று கூறுகிறார். ஆனால் அப்படி நிகழாது.

பாஜகவுக்கு ஆதரவு தரும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தமது கூட்டணி நிலைப்பாடு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.