சென்னை:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து, இன்று நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில், சென்னை  ஐஐடி உள்பட பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜாமியா மில்லியா, அலிகார்க் முஸ்லிம் பல்கலை கழகத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும், சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுபோலு, சென்னை  லயோலா கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவருகின்றனர்.

ஜாமிய பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய காவல்துறையினர்  மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை பெற வலியுறுத்தி சென்னை யில் உள்ள முஹம்மது சதக் ஏ.ஜெ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சட்ட நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையிலும்  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  மாணவர்கள் பேரணியாக வந்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கு போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து,  மாணவர்களை போலிஸார் கைது செய்தனர்.

அதே மதுரை  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அகற்றினர்.

புதுச்சேரி:
 
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது  போலிஸார் தாக்குதல் நடத்தியதை  கண்டித்தும்,  , குடியுரிமை சட்ட திருத்தத்தை பெற வலியுறுத்தி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுபோல,  ஐதராபாத் உருது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உ.பி. மாநிலம்  லக்னோவிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் பரவி வருகிறது.